Header ad

Breaking News

Nanguneri, Vikravandi by-election Results: நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை ஹைலைட்ஸ்

Nanguneri, Vikravandi by-election Results: நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை ஹைலைட்ஸ்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

Nanguneri, Vikravandi Election Results 2019: நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டி இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இரு தொகுதிகளின் ரிசல்ட்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியும் காலியிடங்களாக இருந்தன. இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது. நாங்குநேரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 414. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்குகளில் 66.35 சதவீதம். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387. இதில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவாகின. இது 84.41 சதவீதம்.

இந்த இரு தொகுதிகளிலும், இதே நாளில் தேர்தல் நடைபெற்ற மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கு இன்று (24-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

நாங்குனேரி தொகுதிக்கான ஓட்டு எந்திரங்கள் திருநெல்வேலி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் விழுப்புரம் முத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாங்குனேரியில் மொத்தம் 22 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்படுகிறது. காலை 10 மணி முதல் வாக்கு நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

No comments