Header ad

Breaking News

பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!

பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தனது பயணிகளுக்கு, நம்பமுடியாத ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரயில் மூலம் பயணம் செய்யும் பயணிகளின் வீட்டில் பயண நேரத்தின் போது திருடு எதுவும் நடந்தால், அவர்களுக்கு ரயில்வே இழப்பீடு தொகை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. எப்படி என்று தெரியுமா?

அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய இரண்டாவது தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இந்த இரண்டாவது ரயில் ஜனவரி 17ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்த புதிய முயற்சியை இந்திய ரயில்வே கையில் எடுத்துள்ளது.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இன் இந்த இரண்டாவது தனியார் ரயில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஜனவரி 19ம் தேதி முதல் சேவையை அகமதாபாத்திலிருந்து துவங்குகிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பயணத்தின் போது, அவர்களது வீட்டில் திருட்டு நடந்தால், பயணிகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்துள்ள இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வீட்டிலுள்ள பொருட்களின் காப்பீட்டிற்கு நீங்கள் தனித்தனியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்காக ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை IRCTC ஜெனரல் இன்சூரன்ஸ் லிபர்ட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதிநவீன வசதிகளுடன் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சுமார் 736 பயணிகளை எடுத்துச் செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. நாடியாட், வதோதரா, பருச், சூரத், வாபி மற்றும் போரிவாலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தற்போது www.irctc.co.in வலைத்தளத்தில் துவங்கியுள்ளது. ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இருக்காது என்பது குறிப்பிடதங்கது. பயண நேரத்தில் வீட்டில் திருடு நடந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments