இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை


Covaxin | கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து இன்றளவும் கண்டறியப்படவில்லை.
உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், covaxin TM என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.
புனேவில் கொரோனா கிருமியை ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர். பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments