நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 45. பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி. இவர்
கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதோடு நயன்தாராவின் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகர் வடிவேலுவை போன்றே நடித்ததாலும் அவரைப் போன்ற பாடி லாங்குவேஜை கொண்டிருந்ததாலும் வடிவேல் பாலாஜி என அழைக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை கால்கள் செயலிழந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வடிவேல் பாலாஜி. அங்கு அதிகம் செலவானதால் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கொரோனா நோயாளிகளால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இன்று காலை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே வடிவேல் பாலாஜி சிகிச்சைப் பலனின்றி உயரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 42 வயதே ஆன வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments