Header ad

Breaking News

யூடிபர் இர்ஃபானுக்கு என்ன தண்டனை? சட்டம் என்ன சொல்கிறது?

 யூடிபர் இர்ஃபானுக்கு என்ன தண்டனை? சட்டம் என்ன சொல்கிறது?


சட்டப்படி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனை செய்வது குற்றம். அப்படி எனில் இர்ஃபானுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்?


தமிழ்நாட்டில் உள்ள யூடியூபர்களில் மிகப் பிரபலமானவர் இர்ஃபான். அவர் தனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை ஆணா? பெண்ணா? என்று மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததுடன் இல்லாமல், அதைப் பொதுவெளியில் வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார்.


அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அதற்கான அறிவிப்புப் பலகைகள் வெட்ட வெளிச்சமாகப் போடப்பட்டுள்ளது.


அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாய்,சேய் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல்; பொது இடங்களில் கூட இதற்கான பலகைகள் வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


அப்படி இருந்தும் படித்து இளைஞர் ஒருவர் இந்த மாதிரியான காரியத்தை வீடியோ போட்டுக் கொண்டாடி இருப்பது வேதனையான செய்தி இல்லாமல் வேறு என்ன?


ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது தொடர்கதையாக நடந்து வந்தது. கள்ளிப் பால் கொடுத்து குழந்தையின் உறவினர்களே இதைச் செய்து வருவது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதை ஒழிப்பதற்காகத்தான் 1992இல் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொட்டில் குழந்தை திட்டத்தைத் தமிழ்நாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படிப் பல வழிகளில் முன்னேறிய மாநிலத்தில் வாழும் இளைஞர் இர்ஃபான், இன்னும் அறியாமையில் சிக்கத் தவிக்கிறார் என்பது வேடிக்கையல்ல. வேதனை.


இந்நிலையில் கருக்கலைப்பு பற்றியும் அதன் விழிப்புணர்வு எப்படி உள்ளது என்பது பற்றியும் பேச முன்வந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி, "பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் வயிற்றுக்குள் உள்ள கருவின் பாலினம் என்ன? என்பதை அறிவதைச் சட்டம் தடை செய்துள்ளது.


No comments