Header ad

Breaking News

Gold Price: புத்தாண்டுக்கு நல்ல செய்தி கொடுத்த தங்கம் விலை! ஆனால் இன்று இப்படியா நடக்கணும்?

 Gold Price: புத்தாண்டுக்கு நல்ல செய்தி கொடுத்த தங்கம் விலை! ஆனால் இன்று இப்படியா நடக்கணும்?


சென்னை: சென்னையில் ஜனவரி 2-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையாகிறது.


சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.


கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. ஜனவரி 2-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்துவிட்டது. தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் மட்டுமே தங்கம் விலை குறையும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு லட்சம் விற்றாலும் தங்கத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

Source : oneindia

No comments