Header ad

Breaking News

மிக் 27 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளித்தது இந்திய விமானப் படை

மிக் 27 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளித்தது இந்திய விமானப் படை



ஜோத்பூர்: மிக் 27 ரக போர் விமானங்களுக்கு இந்திய விமானப் படை பிரியா விடை அளித்தது. 1980களில் அப்போதைய சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்டவை மிக் 27 ரக போர் விமானங்கள். இந்திய விமானப் படையில் முறைப்படி 1985-ம் ஆண்டு இப்போர் விமானங்கள் இணைக்கப்பட்டன.

1980, 1990களில் உலகின் சிறந்த போர் விமானங்களில் மிக் ரக போர் விமானங்கள் முதன்மையானவை. பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தின் போது மிக் 27 ரக போர் விமானங்கள் வீர தீர செயல்களைப் புரிந்தன இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் இந்த மிக் ஓர் விமானங்களை தயாரித்தது. மணி நேரத்துக்கு 1,400 கி.மீ தூரம் பறக்கும் வேகம் கொண்டவை இந்த போர் விமானங்கள். நமது விமானப் படையில் மிக் போர் விமானங்கள் 7 இருந்தன. தற்போது இந்த மிக் 27 ரக போர் விமானங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஜோத்பூர் விமானப் படை தளத்தில் நடைபெற்றது. விண்ணில் கடைசியாக பறந்து சாகசங்களை நிகழ்த்திவிட்டு தரை இறங்கிய விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பளிக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலும் மிக் போர் விமானங்கள் பயன்பாட்டில் இல்லை. நமது தேசத்திலும் இன்றுடன் நமது வான்பாதுகாவலன் மிக் போர் விமானங்கள் ஓய்வு பெற்றுவிட்டன.

No comments