Header ad

Breaking News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை


கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ராதிகா இன்று தீர்ப்பளித்தார்.


அதில் சந்தோஷ் குமார் குற்றவாளி என்றும் தண்டனை விவரம் பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார். பிற்பகலில் சந்தோஷ் குமாருக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

போக்சோ வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், 302 சட்டப்பிரிவின் கீழ் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் தடையங்களை மறைத்த குற்றத்திற்கு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.கோவையில் போக்சோ நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கில் மேலும், ஒரு குற்றவாளிக்கு தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாயார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரு குற்றவாளிக்கு இதில் தொடர்பு இருப்பதால் அவரையும் கைது செய்யக்கோரி நீதிமன்றம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments