Header ad

Breaking News

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது



உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸுக்கு இது வரை 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 7.16 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,332 ஆக உள்ளது. 1007 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். நாடு முழுவதும் 7696 பேர் குணமடைந்துள்ளனர். 22,085 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,318 ஆகவும், டெல்லியில் 3,314 ஆகவும், குஜராத்தில் 3,744 ஆகவும் மத்திய பிரதேசத்தில் 2,387 ஆகவும், ஆந்திராவில் 1,259 ஆகவும், ராஜஸ்தானில் 2,364 ஆகவும் தமிழகத்தில் 2058 ஆகவும், தெலுங்கானாவில் 1,004 ஆகவும், உத்தரப்பிரதேசத்தில் 2053 ஆகவும் உள்ளது. திங்கள்கிழமை மாலை முதல் இந்தியாவில் 51 பேர் பலியாகிவுள்ளனர்.

அதில் மகாராஷ்டிராவில் 27 பேரும், குஜராத்தில் 11 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், ஜம்மு காஷ்மீரில் ஒருவரும் ஆவர். பலியானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அந்தமான் நிகோபார் தீவுகளில் 33 பேரும் லடாக்கில் 22 பேரும், மேகாலயாவில் 12 பேரும் புதுவையில் 8 பேரும் கோவாவில் 7 பேரும், மணிப்பூர், திரிபுராவில் தலா இருவரும், மிசோரம், அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

No comments