Header ad

Breaking News

பல்லாயிரம் கோடி தருகிறோம்.. 10 கோடி கொரோனா வேக்சின்களை ஆர்டர் செய்த அமெரிக்கா!

பல்லாயிரம் கோடி தருகிறோம்.. 10 கோடி கொரோனா வேக்சின்களை ஆர்டர் செய்த அமெரிக்கா!


உலகம் முழுக்க தற்போது 150 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு தீவிரமாக முயற்சிகளை, ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. வெவ்வேறு தொழில்நுட்பத்தில் இந்த மருந்துகளை தயாரிக்க உலக நாடுகள் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

இதில் ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் மருந்து, கோவாக்சின் உட்பட இந்தியாவின் இரண்டு மருந்து என்று மொத்தம் 24 மருந்துகள் மனித சோதனையில் இருக்கிறது. ரஷ்யா ஏற்கனவே மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்து இருக்கிறது.

ஜெர்மனியில் இருக்கும் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) மற்றும் வால்நேவா (Valneva) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் தற்போது முன்னிலை வகிக்கிறது. பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) இரண்டு கட்ட சோதனைகள் கடந்து இருக்கிறது. மூன்றாம் கட்ட சோதனையை பெரிய அளவில் இந்த நிறுவனங்கள் செய்ய இருக்கிறது.

இதுவரை செய்யப்பட்ட கொரோனா தடுப்பு சோதனையில் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) நிறுவன மருந்துகள் நல்ல பலன் அளித்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்துகள் சிறப்பாக செயல்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இந்த மருந்துக்கு அவசர அனுமதி கேட்க பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது.

உலகம் முழுக்க இப்படி உருவாக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை முதல் ஆளாக வாங்கவும், கூடுதலாக மருந்துகளை உற்பத்தி செய்யவும், அதேபோல் கொரோனா ஆராய்ச்சிகளை செய்யவும், அமெரிக்கா அரசு பல பில்லியன் டாலர்களை செலவு செய்ய இருக்கிறது. இதற்காக அந்த நாடு Operation Warp Speed என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. வேகமாக மருந்துகளை பெற்று தங்கள் மக்களுக்கு கொடுப்பதே இந்த ஆபரேஷன் ஆகும்.

இதற்காக பல பில்லியன் டாலர்களை செலவு செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்த நிலையில்தான் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக 10 கோடி கொரோனா வேக்சின்களை வாங்க அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இதற்காக 1450 கோடி ரூபாயை செலவு செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது.

1450 கோடி ரூபாய் தருகிறோம். மருந்து உருவாக்கப்பட்டதும் முதல் ஆளாக எங்களுக்கு கொடுங்கள் என்று பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) நிறுவனங்களிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. மருந்து வருவதற்கு முன்பே அமெரிக்கா அவசரமாக அதை ஆர்டர் செய்துள்ளது. இன்னொரு பக்கம் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) மற்றும் வால்நேவா (Valneva) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மூன்று விதமான கொரோனா தடுப்பு மருந்துகளை பிரிட்டன் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மொத்தமாக 9 கோடி டோஸ்களை பிரிட்டன் வாங்குகிறது. அதன்படி பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 3 கோடி டோஸ்களை பிரிட்டன் வாங்குகிறது. 6 கோடி டோஸ்களை வால்நேவா (Valneva) நிறுவனத்திடம் இருந்து பிரிட்டன் வாங்குகிறது. அதேபோல் ஆக்ஸ்போர்ட் உருவாக்கும் AZD1222 மருந்துகளை 10 கோடிகளை வாங்குகிறது.

No comments