Header ad

Breaking News

அடுத்த வருடமே வருகிறது ஜியோ 5ஜி சேவை.. முகேஷ் அம்பானி செம அறிவிப்பு.. சீன ஆதிக்கம் முடிந்தது.

அடுத்த வருடமே வருகிறது ஜியோ 5ஜி சேவை.. முகேஷ் அம்பானி செம அறிவிப்பு.. சீன ஆதிக்கம் முடிந்தது.



மும்பை: அடுத்த வருடம் முதல் 5ஜி நெட்வொர்க் சேவையை ஜியோ நிறுவனம் துவங்க உள்ளது என்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சேர்மன் முகேஷ் அம்பானி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) இன்று நடைபெற்றது. முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இது நடைபெற்றது.

இதில் பல முக்கிய அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப அவரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

முகேஷ் அம்பானி கூறியதை பாருங்கள்: கடந்த ஆண்டின் ஏஜிஎம் உரையில், நிகர கடன் இல்லாத அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற இலக்கை நான் பகிர்ந்து கொண்டேன். தற்போது நமது இலக்கை விட உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி முதலீடு செய்யும். டேட்டா தேவை அதிகரித்தபோதிலும் (சமீபத்திய மாதங்களில் கொரோனா தாக்கம் காரணமாக), ஜியோ நெட்வொர்க் உறுதியாக உள்ளது. எந்த டேட்டா பிரச்சினையும் ஏற்படவில்லை.

No comments