Header ad

Breaking News

13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்..

13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்..


13 ஆண்டுகள் கழித்து ஜூலை மாதத்தில் மழையை பார்க்கும் சென்னை மக்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. கிண்டி, மீனம்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதில் வளசரவாக்கம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில்தான் மழை வெளுத்தது. சாலையோரம் நின்றிருந்த கார்கள் மிதந்தன.

2015-ஆம் ஆண்டு போல் வெள்ளம் வந்துவிடுமோ என்ற அளவுக்கு மக்கள் அச்சமடைந்தனர். எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதப்பது போல் காட்சியளித்தன. மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேய் மழை பெய்தது. அது போல் இன்று காலையும் சென்னையில் பலத்த மழை பெய்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிகவும் அரிதான மழை பெய்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை ஜூலை மாதத்தில் சென்னையில் மழை பெய்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது போன்ற மழை சென்னையில் பெய்தது.

அதோடு அவ்வளவு ஜூலை மாதத்தில் மழை என்பதே சென்னைக்கு கானல் நீராக இருந்து வந்தது. இன்று காலை சென்னையில் மக்கள் மழையுடனே தூக்கத்தில் இருந்து கலைந்தனர். ஏதோ வடகிழக்கு பருவமழை காலம் போன்ற தோற்றத்தையும் கொடுத்துள்ளது. இதில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், பொதுவாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருந்தாலும் நமக்கு நிலப்பகுதியிலிருந்து மட்டுமே மழை கிடைக்கும்.

இந்த முறையும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. ஆனால் கடல் பகுதியிலிருந்து மேகங்கள் நகர்கின்றன. அதுவும் சென்னையில் இந்த ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில்! கேட்கவே மிகவும் நன்றாக இருக்கிறது. உள்மாவட்டங்களுக்கு எப்போதுமே இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழையை தரும் என்றார் பிரதீப் ஜான்.

No comments