Header ad

Breaking News

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவாளர்களுடன் இணைந்தார்!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவாளர்களுடன் இணைந்தார்! 

O Panneerselvam joins DMK in presence of Tamil Nadu CM M K Stalin


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக தி.நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு அமைச்சர் சேகர்பாபுவுடன் ஒரே காரில் வருகை தந்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 


அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். ஓபிஎஸ் திமுகவில் இணைந்து உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி எடப்பாடி பழனிசாமியுடனே சென்று சேர்ந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக் கூறி புதுக் கட்சி தொடங்கிவிட்டார்.


இந்நிலையில் தான் வேறு வழியின்றி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உள்ளார். அதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில், முதலமைசர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தனது மகன் ரவீந்திரநாத் உடன் சென்று சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ அய்யப்பன், சட்டசபையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.

No comments