அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
Annamalai has announced that he is going to launch a new political movement.
நேற்று (05/06/2026) சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னரான பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
தான் ஏற்கெனவே அங்கம் வகித்த 'we the leader' என்கிற இயக்கத்தில் இணையுமாறு இந்த நேரலை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து அந்தத் தளத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையின் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "பாஜகவில் பிராந்திய பிரச்னைகளை பேசுவது பற்றி அண்ணாமலை தெரிவித்திருந்த விஷயங்கள், தவறான குற்றச்சாட்டு" என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக நேரலை வாயிலாகப் பேசிய அண்ணாமலை, "புதிய பாதை, புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை" என்று தெரிவித்தார்.
மேலும், "தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற பாஜக வாய்ப்பு கொடுத்தது. இன்று அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். 2009இல் விஜயகாந்தின் தேமுதிக-வில் மூன்று மாதங்கள் மாணவராக இன்டர்ன்ஷிப் செய்தேன்.
அதன்பின் 2020இல் பாஜகவில் இணைந்தேன். இன்று புதிய இயக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன். என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்பதற்காகவே இப்போது பேசுகிறேன்" என்றார்.
தனது இயக்கத்தில் இணையுமாறு கேட்டு நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறிய அண்ணாமலை, "பாஜகவில் இணைகிறேன் என்கிற வாக்குறுதியை சந்தோஷிடம் கொடுத்துவிட்டேன். 2020இல் பாஜக-வில் இணைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்றார்.

No comments