Header ad

Breaking News

இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்.. பட்டன் போனிலும் UPI.. PhonePe கொண்டு வந்த சூப்பர் வசதி

 இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்.. பட்டன் போனிலும் UPI.. PhonePe கொண்டு வந்த சூப்பர் வசதி


PhonePe நிறுவனம் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத பட்டன் போன் பயனர்களுக்காக 'PhonePe UPI 123Pay' என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • இன்டர்நெட் தேவையில்லை: SMS மற்றும் குரல் வழிகாட்டுதல் (IVR) மூலம் இயங்குவதால், நெட்வொர்க் குறைவாக உள்ள கிராமப்புறங்களிலும் எளிதாக பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

  • 12 மொழிகளில் சேவை: தமிழ், ஆங்கிலம் உட்பட 12 இந்திய மொழிகளில் குரல் உதவி (Voice Assistance) வழங்கப்படுகிறது.

  • இணைக்கப்பட்டுள்ள போன்கள்: Nokia, HMD, Lava, Itel போன்ற முன்னணி பட்டன் போன்களில் இந்த வசதி நேரடியாக வழங்கப்படுகிறது.

  • QR கோட் ஸ்கேன்: கேமரா வசதி கொண்ட பட்டன் போன்களில் QR கோட் ஸ்கேன் செய்தும் பணம் அனுப்ப முடியும்.

பயன்படுத்தும் முறை:

  1. பட்டன் போனில் உள்ள PhonePe செயலியைத் திறக்கவும்.

  2. உங்களது வங்கி விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. டெபிட் கார்டின் கடைசி 6 எண்கள் மற்றும் காலாவதி தேதியை (Expiry Date) உள்ளிடவும்.

  4. புதிய UPI PIN அமைத்து, பரிவர்த்தனைகளைத் தொடங்கலாம்.

ஸ்மார்ட்போன் இல்லாத சுமார் 20 கோடி இந்திய மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்துடன் இணைக்கும் முக்கிய மைல்கல்லாக இச்சேவை கருதப்படுகிறது.

கூகுள் பே, போன்பே போன்ற ஆப்கள் இல்லாமல் இன்றைய உலகம் நகர்வதில்லை.. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை நொடியில் பணத்தை பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பெருகிவிட்டது.. இருந்தாலும், ஸ்மார்ட்போன், இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புற மக்களும், சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்துபவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பின்தங்கியே இருக்கிறார்கள்.. இப்படியொரு குறையைப் போக்கும் வகையில், இப்போது போன்பே நிறுவனம் சூப்பரான புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியா முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட் வசதியற்ற சாதாரண மாடல் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.. இவர்களையும் டிஜிட்டல் உலகிற்கு அழைத்து வரும் நோக்கில், "போன்பே யுபிஐ 123பே" (PhonePe UPI 123Pay) என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம், இண்டர்நெட் இல்லாமலேயே ஈஸியான முறையில் பணத்தை அனுப்ப முடியும். 


"போன்பே யுபிஐ 123பே" 

இந்த சேவையானது SMS அடிப்படையிலான டெக்னாலஜியை பயன்படுத்தி செயல்படுகிறது. இதனால், நெட் இல்லாத இடங்களிலும், குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் தொலைதூர பகுதிகளிலும் கூட தடையில்லாமல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். சாதாரண போன் வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் பணப் பரிவர்த்தனைகளை இந்த புதிய தொழில்நுட்பம் மாற்றி அமைக்கப்போகிறது.. நோக்கியா (Nokia), எச்டிஎம்டி (HMD), லாவா (Lava), ஐடெல் (Itel) போன்ற சில நிறுவனங்களின் போன்களில் இப்படியொரு சேவை முன்கூட்டியே நிறுவப்பட்டு வழங்கப்படுகிறது. ஆங்கிலம் உட்பட 12 இந்திய மொழிகளில் குரல் உதவி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. 


டெபிட் கார்டு 

இந்த சேவையை பயன்படுத்துவதும் எளிது.. முதலில், பட்டன் போனிலுள்ள போன்பே செயலியை திறந்து, உங்களது வங்கியை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, டெபிட் கார்டின் கடைசி 6 நம்பர் மற்றும் காலாவதி தேதியை உள்ளிட்டு, யுபிஐ பின் (UPI PIN) அமைத்தவுடன் உங்களது சேவையை தொடங்கலாம். இதன் மூலம் செல்போன் நம்பர் அல்லது யுபிஐ ஐடி (UPI ID) மூலமாக மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. கேமரா வசதியுள்ள பட்டன் போன்களில் கியூஆர் கோடு, ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம். Also Read ஸ்மார்ட்போன் சந்தையில் ருத்ர தாண்டவம்.. ஈரான் போர் + AI சிப்.. 40% விலை உயர்வால் ஆடிப்போன மக்கள்..! 


ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் போன்பே நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகம் இந்த வசதி சொல்லும்போது, "ஸ்மார்ட்போன்களை தாண்டி பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயனைக் கொண்டு செல்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகர்ப்புறங்களில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காதவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை சாத்தியமாக்கும் இந்த தகவல் அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.. சாதாரணமாக பயன்படுத்தப்படும் பட்டன் போன்களைக் கொண்டும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் "போன்பே யுபிஐ 123பே" என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கூடுதல் வியப்பை தந்து வருகிறது.. 

Recommended For You இனி இஷ்டத்துக்கு சிம் கார்டு வாங்க முடியாது.. கடிவாளம் போட்ட மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கை மொத்தத்தில், பட்டன் போன்களையும் டிஜிட்டல் உலகத்துடன் இணைக்கும் இந்த முயற்சி நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது...!!!

No comments