Header ad

Breaking News

கர்நாடகா முதல்வர் சிவக்குமார் முன்பே! காவிரி விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..!

 கர்நாடகா முதல்வர் சிவக்குமார் முன்பே! காவிரி விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..! 


மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை கோவளத்தில் தனியார் ரிசார்ட்டில் தென்னிந்திய முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாடு மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும். போதை பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவைப்படுகிறது.

பெங்களூர் மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும். கடற்சார் பொருளாதாரத்திர்கு புதிய திட்டமிடல் அவசிமாகிறது. தென் மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. கடலோர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்தத வேண்டும். தொகுதி மறுவரையறையில் தென்நாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது.

வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்பதில் தமிழகம் உறுதிப்பட நம்புகிறது. அதன்படி மத்திய அரசுடன் நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.

No comments